வடமாநில வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி வடமாநில வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமாநில வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
Published on

வாலாஜாபாத்,

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கமலேஷ் குமார் (வயது 32). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். பணிமுடிந்து தன்னுடைய அறைக்கு செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து கமலேஷ் குமார் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் போத்தனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் (24), சுரேஷ்பாபு (27), மாடம்பாக்கம் பகுதியை சோர்ந்த பரத் (23), ஆனந்தன் (23), கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐசக் (27) என்பதும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கத்திகள், ரூ.1,500 மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com