மர்ம நோய்க்கு பலியாகும் ஆடுகள்

பழனி அருகே மர்ம நோய் தாக்கி ஆடுகள் பலியாகின.
மர்ம நோய்க்கு பலியாகும் ஆடுகள்
Published on

பழனி:

பழனியை அடுத்த ஆயக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் தோட்டங்களில் பட்டி அமைத்து வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆயக்குடி சட்டப்பாறை ரோடு பகுதியை சேர்ந்த திருப்பதி என்ற விவசாயியின் பட்டியில் 20 செம்மறி ஆடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், ஆடுகளுக்கு காய்ச்சல், தேலில் பாதிப்பு ஏற்பட்டு திடீரென்று இறந்துவிடுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 ஆடுகள் இறந்துள்ளன. இந்த மர்ம நோய் பிற ஆடுகளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறும்போது, ஆயக்குடியில் வேறு விவசாயிகளின் பட்டியில் இதுபோன்ற பாதிப்பு இல்லை. எனவே சம்பந்தப்பட்ட விவசாயியின் தோட்டத்துக்கு கால்நடை டாக்டர்கள் செந்தில், ஸ்ரீவித்யா ஆகியோர் சென்று ஆடுகளின் தோல், ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனர். சோதனை முடிவில் அதன் பாதிப்பு குறித்து தெரிய வரும். அதைத்தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். மேலும் பிற ஆடுகளுக்கு நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போடப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com