மேம்பாலம் அமைத்து தருவேன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி

சரவணம்பட்டி கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம் பாலம் அமைத்து தருவேன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி.
மேம்பாலம் அமைத்து தருவேன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி
Published on

சரவணம்பட்டி,

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற

முற்போக்கு கூட்டணியின் சார்பில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பையா (எ) ஆர்

கிருஷ்ணன் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள சி.டி.சி

பள்ளிவாசல், பியூனஸ் காலனி பள்ளிவாசல் மற்றும் மீனாட்சி நகர் பள்ளிவாசல் ஆகிய இடங்களுக்கு சென்று இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர். அப்போது அவர் பேசியதாவது சரவணம்பட்டி சத்தி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலத்தை அமைத்து தருவேன் என்றும் கவுண்டம்பாளையம் தொகுதியில் வீடு இல்லாதவருக்கு வீடுகட்டி தருவேன் உறுதி அளித்தார்.

முன்னதாக சரவணம்பட்டி பகுதி கழகத்தின் 29 வது வார்டுக்கு உட்பட்ட, ஜனதா நகரில் 30 இளைஞர்களும், கோவை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, நாயக்கன்பாளையம் ஊராட்சி அ.தி.மு.க வை சேர்ந்த வர்த்தக அணி பொறுப்பாளர் முருகேஷ் மற்றும் ஊராட்சி மன்ற 5 வது வார்டு அ.தி.மு.க உறுப்பினர் செல்வி (எ) பத்மாவதி ஆகியோருடன் 50 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க வினர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த விக்னேஷ், நந்தகுமார், விவேக், ஷ்யாம், நவீன், நரேஷ் ஆகியோர் தலைமையில் 200 இளைஞர்கள் இன்று மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் விஷ்வபிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில்,

பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் கார்த்திக் அவர்களின் தலைமையில், மாவட்ட கழகப் பொறுப்பாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக

வேட்பாளருமான பையாக்கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் முன்னிலையில் தங்களை தி.மு.கழகத்தில் இணைத்துக் கெண்டனர்.இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சந்துரு ஜெயகவி, செல்வநம்பி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திபிரியா சந்துரு ஜெயகவி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் முருகேஷ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் வரதராஜ், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் வினோத், அக்சை மற்றும் அரசூர் பூபதி, சக்தி, பூமேஷ், பிரவீன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com