பெருந்துறைபட்டில் அரசு வேளாண்மை கல்லூரின் நாட்டுநலப்பணி திட்ட முகாம்

வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழா பெருந்துறைபட்டில் நடந்தது.
பெருந்துறைபட்டில் அரசு வேளாண்மை கல்லூரின் நாட்டுநலப்பணி திட்ட முகாம்
Published on

வாணாபுரம்,

கல்லூரி முதல்வர் தேவநாதன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் ஜான்சன் தங்கராஜ் எட்வர்ட், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவி பிருந்தா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி, திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா, சப்இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களை பாதுகாப்பது குறித்து காவலன் செயலி குறித்து போலீசார் பேசினர். தொடர்ந்து ஆபத்து காலங்களில் எவ்வாறு பெண் குழந்தைகள் எச்சரிக்கையாக இருப்பது குறித்தும், காவலன் செயலியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவமாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எடுத்து கூறினர். மேலும் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுதல், புதிய மரக்கன்றுகளை நடுதல், பள்ளி வளாகங்களில் செடிகள் நடுதல் போன்ற பணிகளை மாணவ,மாணவிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் பொன்மலர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com