

கோபால்பட்டி,
நத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.சார்பில் தற்போதய நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் சாணார்பட்டி ஒன்றியம் கூவனூத்து ஊராட்சி நொச்சியோடைப்பட்டியில் உள்ள பாலமுருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.
கிராமம், கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் மக்களிடம் பேசியதாவது:-
தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் வடமதுரையில் நடை பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும் போது நத்தம் தொகுதியில் அரசு கலைகல்லூரி அமைக்கப் படும் என உறுதி அளித்துள்ளார். தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று அவர் முதல்&அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அதற் கான பணிகள் தொடங்கும்
தற்போது மக்களை பற்றி சிந்திக்காத மத்திய, மாநில ஆட்சியால் பெட்ரோல் , டீசல், கியாஸ் சிலிண்டர் விலை பலமடங்கு உயர்ந் துள்ளது. நாம் மீண்டும் சமையலுக்கு விறகு அடுப்பு பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டா லின் முதல்-அமைச்சராக பொறுப் பேற்றவுடன் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும் மேலும் உங்களின் அடிப்படை தேவைகள் 100 நாளில் நிறைவேற்றப்படும் என அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட கவுன்சிலருமான க.விஜயன். பேசும்போது:&
தமிழகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் 2006&11 ஆட்சிகாலத்தில் சுமார் ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது தற்போது அ.தி.மு.க.வின் அலட்சிய, திறமையற்ற நிர்வாகத்தால் ரூ.5.75 லட்சம் கோடி கடன் உள்ளது. தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசனில் தமிழ் தெரியாத வடமாநில இளைஞர் களுக்கு மோசடியாக பணி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் அடிமை ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுவதாக அவர் பேசினார். தொடர்ந்து கூ.குரும்பபட்டி, குளக் காரன்பட்டி, கல்லுப்பட்டி, ராஜக்காபட்டி, புகை யிலைபட்டி, சிலுவத்தூர், அதிகாரிபட்டி, கம்பிளி யம்பட்டி, செங்குறிச்சி, சில்வார் பட்டி உள்பட 50 &க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டிஅம்பலம் வாக்கு சேகரித்தார்.
சாணார்பட்டி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலா ளர் மோகன்,தெற்கு ஒன்றிய செயலாளர் தர்ம ராஜன், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் வேணுகே பால், சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், வடக்கு மாவட்ட கவுன் சிலர் லலிதா,ஒன்றிய கவுன்சிலர்கள் குழந்தை தெரசு,பானுமதி ராஜசேகர், முத்துலட்சுமி சண்முகம், அமிர்தவர்ஷினி, ராஜம்மாள் நல்லுச்சாமி மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் திருத்துவ மனோகரதாஸ், நாகராஜ், வேலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்து லட்சுமி சத்தியராஜ், பராசக்தி முருகேசன், விஜயா வீராச்சாமி, சின்னையா காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் நல்லுச்சாமி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாணார்பட்டி அருகேயுள்ள கல்லுப்பட்டியில் தி.மு.க. வேட்பாளர் ஆண்டிஅம்பலம் வாக்கு சேகரித்து பேசியபோது எடுத்த படம். உடன் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் க.விஜயன், சாணார்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மோகன், சாணார்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் உள்ளனர்.