வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து தாம்பரம், வாலாஜாபாத்திற்கு அரசு பஸ்கள் இயக்கம்

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து தாம்பரம், வாலாஜாபாத்திற்கு 4 அரசு பஸ்களும் இயக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து தாம்பரம், வாலாஜாபாத்திற்கு அரசு பஸ்கள் இயக்கம்
Published on

பூந்தமல்லி,

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை பணி முழுமையாக முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சாலையை இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் நிலையில், தாம்பரத்தில் இருந்து ஆவடி செல்வதற்கான மாநகர அரசு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

இந்த சாலை மார்க்கமாக தாம்பரம் மற்றும் காஞ்சீபுரம் செல்வதற்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் நீண்டகாலமாக வைத்து வந்தனர்.

தற்போது முதல் கட்டமாக பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்ட சாலை வழியாக தாம்பரத்திற்கு 4 அரசு பஸ்களும், வாலாஜாபாத்திற்கு 4 அரசு பஸ்களும் இயக்கப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக தற்போது 2 பகுதிகளுக்கும் 2 அரசு பஸ்களை அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பஸ்சில் பொதுமக்களோடு சிறிது தூரம் பயணம் செய்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். உடன் பூந்தமல்லி நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கவுதமன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com