அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் 4 ஆயிரத்து 380 பேர் பணிக்கு செல்லவில்லை

மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 ஆயிரத்து 380 பேர் பணிக்கு செல்லவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் 4 ஆயிரத்து 380 பேர் பணிக்கு செல்லவில்லை
Published on

திண்டுக்கல்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டுக்குழு அமைப்புகளான ஜாக்டோ, ஜியோ சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஆங்காங்கே, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலும் பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போல, அனைத்து தாலுகா அலுவலகங்கள், மற்ற துறை அலுவலகங்களும் வழக்கமான பரபரப்பு இன்றி வெறிச்சோடின. அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாததால் அரசு துறைகள் முடங்கின. முக்கிய கோப்புகள் தேக்கம் அடைந்தன. பொதுமக்களும் அரசின் சேவைகளை பெற முடியாமல் தவித்தனர்.

இதே போல, ஆசிரியர்களும் பெரும்பாலானோர் பள்ளிகளுக்கு செல்லவில்லை. குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பலரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பல இடங்களில் பள்ளிகள் பூட்டப்பட்டு இருந்தன. சுமார் 25 சதவீத தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன. அந்த பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். மற்ற பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள், பி.எட். மாணவ, மாணவிகள் வகுப்பு எடுத்தனர்.

மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையில் பணிபுரியும் 1,092 பேரில் 398 பேர் பணிக்கு செல்லவில்லை. வளர்ச்சித்துறையில் பணிபுரியும் 683 பேரில் 518 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 828 அரசு ஊழியர்களில் 2 ஆயிரத்து 793 பேர் பணிக்கு செல்லவில்லை.

இதே போல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 177 பேரும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 1,410 பேரும் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 380 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. இவர்களின் விவரங்கள் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com