அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் உறுதி

மணல்மேட்டில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் உறுதி அளித்துள்ளார்.
அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் உறுதி
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார், மணல்மேடு பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் ராஜகுமாருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கிழாய் கிராமத்தில் வேட்பாளர் ராஜகுமார் கூறுகையில், 2006-2011-ம் ஆண்டு நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது மணல்மேடு, வில்லியநல்லூர், இளந்தோப்பு, முருகமங்கலம், காளி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்து மருத்துவர்களை நியமித்ததோடு, காளியில் அறுவை சிகிச்சை அரங்கும் கொண்டு வந்தேன்.

மீண்டும் நான் எம்.எல்.ஏ. ஆனவுடன், அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மணல்மேட்டில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

அப்போது அவருடன் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., சத்தியசீலன், வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com