அரசு அதிகாரிகள் வாரந்தோறும் அறிக்கை அனுப்பவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு

செயல்பாடுகள், ஆய்வுகள் குறித்து அரசு செயலாளர்கள் வாரந்தோறும் அறிக்கை அனுப்பவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
அரசு அதிகாரிகள் வாரந்தோறும் அறிக்கை அனுப்பவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு
Published on

புதுச்சேரி,

புதுவை மாநில கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் கவர்னருக்கு வந்தன. எனவே இதுதொடர்பான ஆய்வுக்கூட்டத்தை கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி நடத்தினார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரிகள், நபார்டு வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது வங்கியை நிர்வகிக்க தேர்தல் மூலம் மட்டுமே நிர்வாகியை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டது. மேலும் நபார்டு வங்கியின் மூத்த அதிகாரிகள் வருடத்துக்கு இருமுறை வங்கியில் தணிக்கை செய்வது என்றும், அவ்வப்போது திடீர் ஆய்வுகள் நடத்துவது என்றும் பிற பணிகளுக்கு சென்றுள்ள வங்கி ஊழியர்களை திரும்ப அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வங்கியின் செயல்பாடுகளில் அங்கீகாரம் இல்லாதவர்களை அனுமதிப்பது இல்லை என்றும், கூட்டுறவு செயலாளர் வங்கியில் திடீர் ஆய்வு நடத்தவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அழுத்தம் காரணமாக யாருக்கும் கடன் வழங்கக் கூடாது எனவும், விதிமுறைகளுக்கு மாறாக பணியாட்களை நியமிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே கவர்னர் கிரண்பெடி புதுவை அரசு செயலாளர்கள் தங்களது செயல்பாடுகள், ஆய்வுகள் குறித்து வாரந்தோறும் தனக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com