அதிராம்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்; பட்டுக்கோட்டை த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் உறுதி

அதிராம்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என பட்டுக்கோட்டை தொகுதி த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் உறுதி அளித்தார்.
அதிராம்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்; பட்டுக்கோட்டை த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் உறுதி
Published on

என்.ஆர்.ரெங்கராஜன் பிரசாரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் போட்டியிடுகிறார். அவர், தினமும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். என்.ஆர்.ரெங்கராஜன் நேற்று அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் வீதி, வீதியாக பிரசார வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரித்தார். அவருக்கு ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

உடற்பயிற்சி கூடங்கள்

அப்போது அவர் கூறுகையில் அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் உறுதியாக அமைக்கப்படும். பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு திடல்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றார்.

பிரசாரத்தில் எம்.எல்.ஏ. சி.வி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மலைஅய்யன், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை, பாரதீய ஜனதா கட்சி சார்பில் வக்கீல் முரளி கணேஷ், அன்பு, த.மா.கா. சார்பில் கண்ணன், சிங்காரவேல், பொன்னம்பலம், அசாருதீன், ஏசுராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com