அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகத்தான் பாடம் நடத்தப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளி மாணவர் க ளுக்கு தொலைக்காட்சி மூலமாகத்தான் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகத்தான் பாடம் நடத்தப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் 15 இடங்களில் ரூ.4 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள், கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிக்கான தொடக்க விழா மற்றும் நிறைவடைந்த பணிகள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாக்களில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிறைவடைந்த பணிகளையும் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக அரசு பள்ளிகள் திறக்கப்படாததால், அரசுபள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொலைக்காட்சி மூலமாகத்தான் பாடங்கள் நடத்தப்படும். ஆன்லைன் மூலம் இல்லை. இதை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் கணினி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளஸ்-2 வில் விடுபட்ட தேர்வை எழுத தற்போது 718 பேர் தான் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். 34 ஆயிரத்து 482 மாணவர்கள் தேர்வு எழுதாமல் உள்ளனர். இவர்களும் தேர்வு எழுத விரும்பினால், வருகிற 27-ந் தேதி தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். இதற் காக தேர்வு மையங் கள் தயார் நிலையில் உள்ளன. இவர் கள் பள்ளிகளிலேயே தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை வாங் கிக் கொள்ள லாம். அப்போது அவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும்.

மேலும், மாணவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி செய்யப்படும். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கூறப்படும் அனைத்து விதிமுறைகளும் பின் பற்றப்படும். பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும். பிளஸ்-2 வில் விடுபட்ட தேர்வை எழுதி தேவையான மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெறுவார்கள். எழுதாத கடைசி தேர்வுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க இயலாது. தமிழகத்தில் மட்டும்தான் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 7,500 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. ஆனால், தற்போது நடத்தப்பட வேண்டும் என்பதால், அதில் மாணவர்களை பங்கேற்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com