

சாலை மறியல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு கச்சேரி வீதியில் 7-வது நாளாக நேற்று காலை அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
66 பே கைது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரேடு டவுன் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்பட 66 பேரை கைது செய்தனர். அவர்கள் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.