கவர்னர் கிரண்பெடி அகமதாபாத் சென்றார்

புதுவை கவர்னர் கிரண்பெடி குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்றுள்ளார்.
கவர்னர் கிரண்பெடி அகமதாபாத் சென்றார்
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி நேற்று முன்தினம் இரவு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதுதொடர்பாக புதுவை அரசியலில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அதேபோல் புதுவை கவர்னர் கிரண்பெடியும் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்றுள்ளார். அகமதாபாத் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட கவர்னர் கிரண்பெடி இன்று புதுச்சேரி திரும்புகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com