சங்கராச்சாரியாரிடம் கவர்னர் ஆசி

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்னும் சில தினங்களில் பஞ்சாப் மாநில கவர்னராக பதவி ஏற்க உள்ளார்.
சங்கராச்சாரியாரிடம் கவர்னர் ஆசி
Published on

காஞ்சீபுரம்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்னும் சில தினங்களில் பஞ்சாப் மாநில கவர்னராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் காஞ்சீபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்திக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஓரிக்கை மணி மண்டபத்துக்கு வருகை புரிந்தார்.

காஞ்சீபுரம் ஓரிக்கை மணிமண்டபத்துக்கு வருகை தந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். காஞ்சி சங்கர மடம் சார்பில் மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் மாலை அணிவித்து மரியாதை செய்து மண்டபத்திற்குள் அழைத்து சென்றார். இதைத்தொடர்ந்து ஓரிக்கை மணிமண்டபத்தில் சாமி தரிசனம் செய்த பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆசி பெற்றார். இதைதொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியாருடன் 10 நிமிடங்கள் தனிமையில் ஆலோசனை மேற்கொண்ட அவர் சென்னை திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில நெசவாளர் அணி தலைவர் நாகுஷா, மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சீபுரம் குமாரசாமி, மாவட்ட தலைவர் கே. எஸ்.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com