

அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் கீழ்தெருவை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 67). இவர் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக தக்கோலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.