பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு மேய்ச்சல் நிலம் ஒதுக்கீடு : மந்திரிசபை ஒப்புதல்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு மேய்ச்சல் நிலத்தை ஒதுக்க மராட்டிய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு மேய்ச்சல் நிலம் ஒதுக்கீடு : மந்திரிசபை ஒப்புதல்
Published on

மும்பை,

மத்திய அரசின் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான மேய்ச்சல் நிலத்தை ஒதுக்க மராட்டிய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக மராட்டிய மாநகராட்சி சட்டம் மற்றும் நகரசபை, நகர பஞ்சாயத்துகள் மற்றும் தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்-மந்திரி அலுவலகம் கூறியுள்ளது.

மேலும் அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 60-ல் இருந்து 65-ஆக உயர்த்தும் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com