ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் கடும் பாதிப்பு பள்ளிபாளையத்தில் வைகோ பிரசாரம்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று வைகோ தேர்தல் பிரசாரம் செய்தார்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் கடும் பாதிப்பு பள்ளிபாளையத்தில் வைகோ பிரசாரம்
Published on

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று திறந்த ஜீப்பில் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-தற்போது தமிழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம், பொள்ளாச்சி விவகாரம் பற்றி பார்த்தால் தமிழகம் எங்கோ போய்க்கொண்டிருப்பதாக தெரிகிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 80 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று கூறிய பிரதமர் மோடி 200 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக கூறியவர் 15 ரூபாய் கூட தரவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே வேட்பாளர் கணேசமூர்த்திக்கு வாக்களித்து ராகுலை பிரதமர் ஆக்குங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com