

ஏழு வருடங்களாக இந்த பணியை மாகி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். கேரளாவை சேர்ந்த ஆங்கில இலக்கிய பட்டதாரியான இவர், மத சம்பந்தமான கல்வியை கற்க இத்தாலி சென்றிருக்கிறார். பின்பு அங்கிருந்தே தேர்வு எழுதி வாடி கனுக்கான சுற்றுலா வழிகாட்டியாகி விட்டார்.
வாடிகனில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றவேண்டும் என்றால் அதற்குரிய உரிமம் பெற வேண்டும். அந்த உரிமத்தை பெறுவதற்கான பரீட்சை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் நடக்கும். ஆங்கிலமும், இ்த்தாலி மொழியும் பயின்றால்தான் அந்த பரீட்சையை எழுத அனுமதிப்பார்கள். நான் ஏழு வருடங்களுக்கு முன்பே பரீட்சை எழுதி, லைசென்ஸ் பெற்று விட்டேன். முதலில் ரோமில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தேன். பின்பு வாடிகனுக்கான உரிமம் பெற விண்ணப்பித்தேன். அது அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது. கர்டினால் அகஸ்டினோ எனக்கு உதவி செய்தார். அந்த உரிமத்தை பெற்ற பிறகுதான் இந்தியாவில் இருந்து அங்கீகாரம் பெற்ற முதல் சுற்றுலா வழிகாட்டி நான்தான் என்பதை அறிந்தேன். அந்த தருணம் மிக மகிழ்ச்சியானது.. என்கிறார், மாகி.
உலகிலே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களில் வாடிகன் நகரம் குறிப் பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக 70 லட்சம் பயணிகள் வந்துபோகிறார்கள். அவர் களுக்கு சேவை செய்ய ஆங்கிலம், இத்தாலியன், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் ஆகிய முக்கிய மொழிகள் தெரிந்திருக்கவேண்டும்.
வாடிகன் என்பது ஒரு குட்டி நாடு. 800-க்கும் குறைவான மக்களே அங்கு வசிக்கிறார்கள். அவர்களை தவிர்த்து அதிகாரபூர்வ பணியாளர்களாக 2400 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 400 பேர் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகள். வழிகாட்டிகளுக்கு அங்கேயே வசிப்பிடங்கள் உள்ளன. ஆனால் மாகி தனது கணவர் மார்க் குடன் ரோமில் வசித்து வருகிறார்.
நான் ரோமில் வழிகாட்டியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மார்க்குடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் ஒரே ஏஜென்சியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தோம். அவர் அமெரிக்காவை சேர்ந்தவர். நாங்கள் இருவரும் புதிதாக அந்த வேலையில் சேர்ந்திருந்ததால் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொண் டோம். அப்படியே நட்பாகி, திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.