குவாகம் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு

குவாகம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள பொதுமக்களை அழைத்து போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தினை நடத்தினார்.
குவாகம் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
Published on

செந்துறை,

அரியலூர் மாவட்டத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முதல் முறையாக கடந்த வாரம் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்ற குவாகம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள பொதுமக்களை அழைத்து போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தினை நடத்தினார். அப்போது பேசிய அவர், போலீசார் மற்றும் பொதுமக்கள் நட்புறவுடன் இருக்க வேண்டும் ரவுடி தனம் செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று பேசினார். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்து எந்த நேரத்திலும் தங்களது பிரச்சினை தொடர்பாக என்னை அழைக்கலாம் என்று கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குவாகம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலக கோப்புகளை ஆய்வு செய்து போலீசாருக்கு சில அறிவுரைகள் வழங்கினார். அதன்பின்னர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com