ஆடையாக மாறிய கூந்தல்

நீளமான கூந்தலை ஆடையாக மாற்றி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார், ரபுன்ஷெல். 32 வயதான இவர் கிழக்கு லண்டனை சேர்ந்தவர்.
ஆடையாக மாறிய கூந்தல்
Published on

7 வயதில் இருந்தே ரபுன்ஷெலின் கூந்தல் நீளமாக வளர ஆரம்பித்திருக்கிறது. அதனால் அடிக்கடி கூந்தலை வெட்டவேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கூந்தலை வெட்டி அழகுப்படுத்த தொடங்கி இருக்கிறார். கூந்தல் வேகமாக வளர்ந்து வந்திருக்கிறது. ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்த, 2015-ம் ஆண்டு முதல் முடிவெட்டுவதை நிறுத்திவிட்டார்.

நீளமாக முடி வளர்ந்த போதிலும் நண்பர்களோ, குடும்பத்தினரோ முடியை வெட்டுமாறு கூறவில்லை. அதற்கேற்ப கூந்தலும் நல்ல நிலையில் இருந்தது. முன்பு முழங்கால் வரை வளர்ந்திருக்கும். இப்போது கணுக்கால் வரை முடி நீண்டு கிடக்கிறது என்கிறார்.

ரபுன்ஷெல்லின் கூந்தல் நீளமாக மட்டுமல்ல அடர்த்தியாகவும் இருக்கிறது. அதனால் பராமரிப்பதற்கு சிரமப்படவும் செய்கிறார். வீட்டிலேயே தயார் செய்யப்படும் பொருட்களையே கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்து கிறார். அதில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேங்காய் எண்ணெய்யுடன் சில பொருட்களை பயன் படுத்தி வீட்டிலேயே கூந்தலை மசாஜ் செய்கிறேன். அரை மணி நேரம் கழித்து ஷாம்புவால் கூந்தலை அலசிவிடுவேன். கூந்தலை உலர வைக்கும் மிஷினை பயன்படுத்தினால் 20 நிமிடங்களில் நன்றாக உலர்ந்துவிடும். ஆனால் நான் அதனை விரும்புவதில்லை. இயற்கையாகவே திறந்தவெளியில் கூந்தலை உலர்த்துகிறேன். அதற்காகவே சில மணி நேரங்களை செலவிட வேண்டியிருக்கிறது. சில நாட்கள் குளித்துவிட்டு இரவில் தூங்க சென்றால் மறுநாள் காலை வரையிலும் கூந்தல் ஈரப்பதமாகவே இருக்கும். கூந்தலை உலர்த்துவதுதான் பிரச்சினையாக இருக்கிறது என்கிறார்.

கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் இருப்பதால் அதனையே ஆடையாகவும் அலங்கரித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், விதவிதமான ஸ்டைல்களில் கூந்தலை அழகுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com