10, 12-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யலாம்

10, 12-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யலாம் என்று கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
10, 12-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யலாம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநில கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இதில் மாணவர்களுக்கான தோவு நுழைவு சீட்டை (ஹால்டிக்கெட்) கல்வி வாரியம் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து வந்தது.

இந்தநிலையில் நடப்பாண்டு முதல் பள்ளி நிர்வாகங்கள் இணையதளத்திலேயே மாணவர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. இதன்மூலம் இனிமேல் மாணவர்கள் தங்கள் தேர்வு நுழைவு சீட்டு தொலைந்து போனாலும் அதற்கான நகலை பள்ளி நிர்வாகத்திடமே இலவசமாக பெற்று கொள்ள முடியும் என மும்பை மண்டல கல்வி வாரிய தலைவர் சரத் கன்டகலே கூறினார்..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com