பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

பல்வேறு வழக்குகளில் சைபர் கிரைம் போலீசார் மூலம் கைப்பற்றப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஒப்படைத்தார்.
பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
Published on

உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 267 வழக்குகளில் தொடர்புடைய 176 செல்போன்களை மீட்டனர்.

இந்த செல்போன்களை உரிமையாளரிடம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஒப்படைத்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.31 லட்சத்து 86 ஆயிரம் ஆகும். இதேபோல் வங்கி கணக்குகளில் இருந்து திருடப்பட்ட ரூ.19 லட்சமும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விழிப்புடன் இருக்க வேண்டும்

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கூறும்போது:-

பொதுமக்கள் சைபர்கிரைம் குற்றவாளிகளிடம் சிக்காமல் விழிப்புடன் இருக்கவேண்டும். எந்த ஒரு நபருக்கும் பணம் அனுப்பும் முன்பு அவரது உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே சமயம் எஸ்.எம்.எஸ், இ-மெயில், மற்றும் வாட்ஸ் ஆப்களில் வரும் லிங்குகளில் சென்று செல்போன் நம்பர், வங்கி கணக்கு, ஓ.டி.பி. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com