‘ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார்’ சாவர்க்கரை கோழை என விமர்சித்த தியாகி எச்.எஸ்.துரைசாமி பா.ஜனதா கடும் கண்டனம்

ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டவர் என கூறி சாவர்க்கரை கோழை என்று விமர்சித்த சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமிக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார்’ சாவர்க்கரை கோழை என விமர்சித்த தியாகி எச்.எஸ்.துரைசாமி பா.ஜனதா கடும் கண்டனம்
Published on

பெங்களூரு,

பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., மூத்த சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமியை, பாகிஸ்தானின் ஏஜெண்டு என்று கடுமையாக விமர்சித்தார். இதை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

தன் மீதான இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த எச்.எஸ்.துரைசாமி, மகாத்மா காந்திக்கு வேறு யாரும் சமமானவர்கள் இல்லை. அதே போல் நான் என்றென்றும் துரைசாமியே. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தவறு செய்துவிட்டேன் என ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதி சாவர்க்கர் கோழையை போல் மன்னிப்பு கேட்டார். என்னை அத்தகையவர்களுடன் தயவு செய்து ஒப்பிட வேண்டாம் என்றார். எச்.எஸ்.துரைசாமியின் இந்த கருத்தை பா.ஜனதா கண்டித்துள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதாவின் இளைஞர் அணி துணைத்தலைவர் பீமாசங்கர் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் எச்.எஸ்.துரைசாமியும் ஒருவராக இருக்கலாம். ஆனால் அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்தினாரா? என்பது எங்களுக்கு தெரியாது. கர்நாடகத்தில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் யாரும் தேசத்துரோகிகளுடன் டவுன் ஹாலில் உட்கார்ந்து கோஷம் எழுப்பவில்லை. சாவர்க்கரின் சுதந்திர போராட்டம் குறித்து எச்.எஸ்.துரைசாமி முதலில் படிக்க வேண்டும். சாவர்க்கருக்கு எந்த நிலையிலும் எச்.எஸ்.துரைசாமி நிகரானவர் இல்லை. சாவர்க்கர் பற்றி பேசிய பேச்சை அவர் திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக நாங்கள் தீவிர போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பீமாசங்கர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com