சேரன்மாதேவி பகுதியில் பலத்த சூறைக்காற்று; 20 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன

சேரன்மாதேவி பகுதியில் பலத்த காற்றுக்கு 20 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன.
சேரன்மாதேவி பகுதியில் பலத்த சூறைக்காற்று; 20 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன
Published on

சேரன்மாதேவி,

சேரன்மாதேவி சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளைகுளம், உலகன்குளம், ஓடைக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செவ்வாழை, நாட்டு வாழை, ஏத்தன் வாழை போன்ற பல்வேறு வாழை ரகங்களை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். இந்த பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன.

இதுகுறித்து தகவலறிந்த சேரன்மாதேவி தாசில்தார் கனகராஜ் சம்பவ இடத்துக்கு சென்று, சேதம் அடைந்த வாழைகளை பார்வையிட்டார். வாழைகள் குலை தள்ளி 50 சதவீதம் விளைச்சல் அடைந்த நிலையில் சூறைக்காற்றில் சாய்ந்ததால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

சுரண்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டு இருந்தார். நேற்று மதியம் வீசிய பலத்த காற்றில் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன.

மேலும் பலத்த காற்றுக்கு சுரண்டை பகுதியில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அதில் மரத்துக்கு அடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததால் அவை சேதம் அடைந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com