திம்பம் மலைப்பாதையில் கடும் மூடுபனி

திம்பம் மலைப்பாதையில் கடும் மூடுபனி நிலவி வருகிறது.
திம்பம் மலைப்பாதையில் கடும் மூடுபனி
Published on

பவானிசாகர்,

சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது திம்பம் மலைப் பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரம் கொண்ட இம்மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த கொண்டை ஊசி வளைவு மலைப்பாதையில் இருபக்கமும் அடர்ந்த வனப்பகுதி சூழப்பட்டுள்ளது.

அதனால் இப்பகுதி எப்போதும் குளிர்ச்சியாக காணப்படும். குட்டி கொடைக்கானல் என்று திம்பம் மலைப்பாதையை சுற்றுலா பயணிகள் அழைப்பார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் பகல் 11 மணி வரை திம்பம் மலைப்பகுதியில் கடும் மூடுபனி ஏற்பட்டது. 20-வது கொண்டை ஊசி வளைவில் ரோட்டில் எதிரே வாகனங்கள் வருவது தெரியாத அளவுக்கு மூடுபனி சூழ்ந்திருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. சுற்றுலா பயணிகள் மூடுபனியை ரசித்து பார்த்து செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com