கடம்பூர் அருகே சூறாவளிக்காற்றுடன் கனமழை: ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு

கடம்பூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கடம்பூர் அருகே சூறாவளிக்காற்றுடன் கனமழை: ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு
Published on

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே மாக்கம்பாளையம் மலை கிராமம் உள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து மாக்கம்பாளையம் செல்லவேண்டும் என்றால் 2 ஓடைகளை கடந்து செல்ல வேண்டும். இந்தநிலையில் நேற்று பகல் 3 மணி வலை மாக்கம்பாளையத்தில் கடும் வெயில் அடித்தது. அதன்பின்னர் 4 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்தன. பிறகு திடீரென மழை பெய்ய தொடங்கியது. மாலை 5.30 மணி வரை மழை பெய்தது.

அதைத்தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மீண்டும் மழை பெய்தது. நேற்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்தது.

சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மாக்கம்பாளையத்தில் ரோட்டு ஓரத்தில் இருந்த மரங்கள் முறிந்து ரோட்டிலேயே விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் தடைபட்டது. மழை நீரால் 2 ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மாக்கம்பாளையம் செல்லவேண்டிய பஸ் குரும்பூர் வரை மட்டுமே செல்கிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராமமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுவருகிறார்கள். குன்றி, கோட்டமாளத்திலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com