திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 46 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 46 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இடி, மின்னலுடன் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரி, குளம் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 46 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கீழ்பென்னாத்தூர்-41, போளூர்-36.2, வந்தவாசி-31, ஜமுனாமரத்தூர் மற்றும் செய்யாறு-30, தண்டராம்பட்டு-28, சேத்துப்பட்டு-27, ஆரணி-26.5, செங்கம்-26.4, திருவண்ணாமலை-16, வெம்பாக்கம்- 12 ஆகும்.

அணைகளுக்கு நீர்வரத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, குப்பநத்தம் அணை, மிருகண்டாநதி அணை, செண்பகத்தோப்பு அணை என 4 அணைகள் உள்ளன.

சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 231 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது இந்த அணையில் 82 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இதில் 1679 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் செண்பகத்தோப்பு அணைக்கு விநாடிக்கு 45 கன அடி தண்ணீர் வந்து கெண்டு இருக்கிறது.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டை சுற்றியுள்ள பகுதிகளான நெடுங்குணம், தேசூர், நம்பேடு, தேவிகாபுரம், கங்கை சூடாமணி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மழை தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அதன் பின்னரும் சாரல் மழை பெய்து காண்டே இருந்தது.

மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

தற்போது சேத்துப்பட்டு பகுதியில் விவசாயிகள் மணிலா பயிரிட்டுள்ளனர்.

தற்போது பெய்த மழை மணிலாவுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com