2 மாதங்களுக்கு பிறகு புராதன சின்னங்கள் திறப்பு: போதிய சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடியது

2 மாதங்களுக்கு பிறகு புராதன சின்னங்கள் திறப்பு: போதிய சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடியது.
2 மாதங்களுக்கு பிறகு புராதன சின்னங்கள் திறப்பு: போதிய சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடியது
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 2 மாதங்களுக்கு பிறகு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேற்று திறக்கப்பட்டன. பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பணம் பெற்றுக்கொண்டு நுழைவு சீட்டு வழங்கும் கட்டண மையங்கள் செயல்படும் ஐந்துரதம், கடற்கரை கோவில் ஆகிய இடங்களில் உள்ள நுழைவு சீட்டு கவுண்ட்டர்கள் மூடப்பட்டன. இணைய தளம் மூலம் ரூ.40 கட்டணம் செலுத்தி ஆன்லைன் டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என மொத்தம் 7 மணி நேரம் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை அறிவித்து உள்ளது.

புராதன சின்னங்கள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று குறைவான சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர். ஆனால் காதல் ஜோடிகள் அதிகளவில் வந்திருந்தனர். குடும்பம், குடும்பமாக வரும் பயணிகள் கூட்டம் இன்றி கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com