இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வை 1,749 பேர் எழுதினர்

தர்மபுரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வை 1,749 பேர் எழுதினர்.
இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வை 1,749 பேர் எழுதினர்
Published on

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை கிரேடு- 3 பணிக்கான தேர்வுகள் தர்மபுரி மாவட்டத்தில் 10 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 2,948 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1,749 பேர் தேர்வை எழுதினார்கள். தேர்வு எழுதுவோர் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடாமல் தடுக்க பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக இந்த தேர்வு நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com