கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை திருட்டு

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது.
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
Published on

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான இந்திரா அணு ஆராய்ச்சி மையத்தில் அறிவியல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் இமா குளோப் சில்வியா (வயது 54). கல்பாக்கம் அணு சக்தி துறை ஊழியர் குடியிருப்பு முதல் தெருவில் வசித்து வருகிறார். இவரது கணவர் சேலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் காலை கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்று விட்டனர். பொருட்கள் வாங்கி முடிந்ததும் இரவு கல்பாக்கம் திரும்பினர்.

அப்போது அங்கு வீட்டின் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கல்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் உள்பட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரத்தில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com