

கோடைகாலம் என்பதால் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தன்னுடைய வீட்டின் வெளிப்புற கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்து தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்
தலையணையின் அருகில் வைத்திருந்த தங்கச்சங்கிலி, ஜிமிக்கி என 1 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கவுரி இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது
சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.