மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வீடுகள், வீதிகளில் கருப்புக்கொடி கட்டிய பா.ம.க.வினர்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வீடுகள், கடைகள், வீதிகளில் கருப்புக்கொடி கட்டி பா.ம.க.வினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வீடுகள், வீதிகளில் கருப்புக்கொடி கட்டிய பா.ம.க.வினர்
Published on

பள்ளிப்பாளையம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் பள்ளிப்பாளையத்தில் வீடுகள், கடைகள் மற்றும் வீதிகளில் கருப்புக்கொடி கட்டி பா.ம.க.வினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையொட்டி பள்ளிப்பாளையம், காவேரி நகர், தாஜ்நகர், காடச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது.

இதே போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வெண்ணந்தூரில் பா.ம.க. வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வெண்ணந்தூர் ஒன்றிய செயளாலர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில், பா.ம.க மாவட்ட அமைப்பு செயளாலர் பழனிசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயளாலர் தங்கம், மாவட்ட மாணவர் சங்க செயளாலர் தங்கம், வெண்ணந்தூர் பேரூர் இளைஞர் சங்கதலைவர் ராமு, சண்முகம், சவுந்தரராஜன், தனசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகில் மின்னக்கல் பிரிவு, அண்ணாசிலை பஸ் நிறுத்தம், கட்சி அலுவலகம் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com