

அடையாறு,
சென்னை பெசன்ட் நகர் 3வது அவென்யூ சர்வீஸ் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 56 கடைகள் மாத வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அந்த இடத்தில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டது. இதனை தொடர்ந்து கடைகளை காலி செய்யும்படி கடையில் வாடகைக்கு இருந்த வியாபாரிகளுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினார்கள்.