காவேரிப்பாக்கத்தில் பரபரப்பு விவசாய நிலத்தில் மனித எலும்பு கூடு - போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கத்தில் விவசாய நிலத்தில் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவேரிப்பாக்கத்தில் பரபரப்பு விவசாய நிலத்தில் மனித எலும்பு கூடு - போலீசார் விசாரணை
Published on

காவேரிப்பாக்கம்,

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் பராமரிப்பு இல்லாத காரணத்தால் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த பன்றி வளர்ப்பவர்கள், பன்றிகளை மேய்ச்சலுக்காக விடுவதற்கு முட்புதர்கள் வழியாக சென்றனர். அங்கு மனித எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எலும்புக்கூட்டின் மண்டை தனியாகவும், மனித எலும்புகள் தனியாகவும் கிடந்தன.

இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து மண்டை ஓடு, மனித எலும்புகள் ஆகியவற்றை கைப்பற்றினர். அருகில் ஆண்கள் அணியும் செருப்பு, தேசியமயமாக்கபபட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம்.கார்டு ஆகியவை இருந்தன. அவற்றையும் போலீசார் கைப்பற்றி மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகளை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் பல்வேறு போலீஸ் நிலையங்களை தொடர்பு கொண்டு யாராவது மாயமானது குறித்து புகார் ஏதும் செய்துள்ளார்களா? தகவல் அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இறந்தவர் குறித்து அடையாளம் கண்டுபிடிக்க அங்கு கிடந்த ஏ.டி.எம்.கார்டு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com