கணவன், மனைவியை தாக்கியவர் கைது

திருவள்ளூர் அருகே கணவன், மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கணவன், மனைவியை தாக்கியவர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசை இளங்காளியம்மன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது40). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் மனைவி மோகனாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ் (29) என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சரவணனையும் அவரது மனைவி மோகனாவையும் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார்.

இதில் காயம் அடைந்த சரவணன், மோகனா இருவரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மோகனா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை படூர்மேட்டை சேர்ந்தவர் பொன்னப்பன்(44). இவர் படூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனத்தில் நடந்த திருட்டு தொடர்பாக அங்கு பணிபுரியும் பிரசாந்த் என்பவரின் சகோதரர் வசந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கு மேலாளர் பொன்னப்பன்தான் காரணம் என நினைத்த பிரசாந்த் நேற்று முன்தினம் மனைவியுடன் வந்து கொண்டிருந்த பொன்னப்பனை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசி கையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கியுள்ளார். இது குறித்து பொன்னப்பன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரசாந்தை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com