காரைக்குடி தொகுதியினை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன்; அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி பிரசாரம்

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி காரைக்குடி, தேவகோட்டை ஒன்றிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் தேர்தல் பிரசாரத்தில் குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பேசினார்.
காரைக்குடி தொகுதியினை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன்; அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி பிரசாரம்
Published on

அப்போது தேர்போகி வி.பாண்டிபேசியதாவது, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்ற இடங்களில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியமும் ஒன்று. காரணம் நாங்கள் கண்ணங்குடி யூனியன் தலைவராக இருந்தபோது லஞ்ச ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் செய்தோம். மக்களின் தேவை அறிந்து பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றியதுமாகும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே பல்வேறு சரித்திர சாதனைகள் படைத்த ஊர் தேவகோட்டை. ஆனால் காலத்திற்கேற்ற வளர்ச்சி இங்கு இல்லை. நான் வெற்றி பெற்றவுடன் இதில் தனிக்கவனம்

செலுத்துவேன். அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் தேவகோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லை என்பது வருத்தத்திற்குரியது. நான் வெற்றி பெற்றவுடன் தேவகோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியும், அரசு கலைக்கல்லூரியும்கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வேன். தேவகோட்டை வாரச்சந்தையினை நவீன முறையில் சீரமைத்து வியாபாரிகளும் பொது மக்களும் பயன் பெற நடவடிக்கை மேற்கொள்வேன்.

ஆற்றங்கரையோரம் மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். ஊருணிகளை சீரமைத்து அதனைச் சுற்றிலும் அழகிய பூங்காக்கள் அமைத்து நடைபயிற்சி மேற்கொள்ள வழிவகைகள் செய்வேன், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை எதிர்ப்பேன். காரைக்குடி சட்டமன்ற தொகுதியினை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். தொகுதி மேம்பாட்டு நிதியை மக்களின் விருப்பம் அறிந்து கருத்து கேட்டு அதன் பின்னரே திட்டப்பணிகளுக்கு வெளிப்படையான முறையில் பயன்படுத்துவேன். நெசவாளர்கள் வாழ்வாதாரங்களை முன்னேற்ற வாய்ப்பிருக்கும் அனைத்து தளங்களிலும் கைத்தறி விற்பனையை அதிகரிக்க முயற்சி செய்வேன். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஒரு பகுதியில் இ-சேவை மையம் அமைத்து பொதுமக்கள், அரசு ஆவணங்கள் சான்றிதழ்கள் எளிதாக பெற வழிவகை செய்யப்படும். இவ்வாறு பேசினார். பிரசாரத்தில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com