மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி திருச்சி மேற்கு தொகுதியை நட்சத்திர தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்; தி.மு.க. வேட்பாளர் கே.என். நேரு உறுதி

திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என். நேரு ஓட்டு சேகரித்தார்.
திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தபோது
திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தபோது
Published on

திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு கருமண்டபம், செல்வநகர், கோரிமேடு, பெரியமிளகுபாறை, சின்னமிளகுபாறை, பர்மா காலனி, ராஜாகாலனி, குமிளித்தோப்பு ஆகிய பகுதிகளில் தீவிரமாக ஓட்டு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலைகள் அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்து அவருக்கு ஆதரவு அளித்தனர்.

அப்போது பொதுமக்களிடையே பேசிய கே.என்.நேரு, இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் அனைத்தும் எனக்கு நன்றாக தெரியும். குடிநீர் பிரச்சனை, தெருவிளக்குகள், சாலை வசதிகள், வடிகால் வசதி குறிப்பாக குடியிருப்பு களுக்கு கூட்டுமனை பட்டா அனைத்தும் தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனவுடன் உறுதியாக வழங்கப்படும். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி திருச்சி மேற்கு தொகுதியை நட்சத்திர தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று உறுதியளித்தார்.

அவருடன் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மோகன்தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, மாநில மருந்து வணிகர்கள் சங்க தலைவர் தில்லைமெடிக்கல் மனோகரன், கம்யூனிஸ்டு கட்சி சுரேஷ், மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் ஏராளமான தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் உடன் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com