

லால்குடி,
திருச்சி மாவட்டம் லால்குடியில் அ.தி.மு.க. கூட்டணி த.மா.கா. கட்சி வேட்பாளர் தர்மராஜ் லால்குடியில் தாளக்குடி, அகிலாண்டபுரம், மேலவாளாடி, கீழவாளாடி, சிறு மருதூர் நெருஞ்சில குடி, மாந்துறை, ஆங்கரை உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக காலை 6 மணிக்கு முதுவத்தூரில் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு அங்குள்ள பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். லால்குடி மண்ணின் மைந்தன். லால்குடி தொகுதி வளர்ச்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பின்னோக்கி உள்ளது. நான் இத்தொகுதியை மக்களுடன் சேர்ந்து 15 ஆண்டுகள் வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வேன். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தி தருவேன். மேலும் லால்குடியில் இடையாற்றுமங்கலம் - கிளிக்கூடு பகுதிகளை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் மேம்பாலம் கட்ட பாடுபடுவேன் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின் போது அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பர்வீன் கனி, ஒன்றிய செயலாளர்கள் லால்குடி தெற்கு சூப்பர் நடேசன், புள்ளம்பாடி தெற்கு சிவக்குமார், வடக்கு ராஜாராம், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எம்.பாலன், மாவட்ட பாசறை செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு, நகர செயலாளர்கள் லால்குடி சந்திரசேகர், பூவாளூர் ஜெயசீலன், கல்லக்குடி பிச்சை பிள்ளை, புள்ளம்பாடி அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் விஜயா, மாவட்ட இணை செயலாளர் ரீனா செந்தில் உள்ளிட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.