உயிர் உள்ளவரை உங்களுக்காக உழைப்பேன்; விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் பிரசாரம்

உயிர் உள்ளவரை உங்களுக்காக உழைப்பேன் என்று தி.மு.க.வேட்பாளர் பழனியப்பன் கூறினார்.
தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.
தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.
Published on

வாக்குசேகரிப்பு

விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கைவாசல், குருக்களையாப்பட்டி,பெருஞ்சுனை, ஆரியூர், மண்ணவேளாம்பட்டி, சித்தன்னவாசல், நல்லம்மாள்சத்திரம், மாங்குடி, வயலோகம், நிலையப்பட்டி, புல்வயல், பெருமாநாடு, மேலபளுவஞ்சி, கீளபளுவஞ்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் சுற்றுப்பயணம் செய்து வாக்குசேகரித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

மூன்றாவது முறையாக போட்டியிடும் எனக்கு இந்தமுறை வாய்ப்பு தாருங்கள். சாதி, மத பேதமின்றி, கட்சி பாகுபாடின்றி தொகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஏழை வேட்பாளரான என்னை வெற்றி பெற செய்தால் உயிர் உள்ளவரை உங்களுக்காக உழைப்பேன். எந்த பலனையும் எதிர்பார்க்காமல் இரவு, பகலாக உங்களுடன் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். அனைத்து ஊர்களிலும் மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

10 நாட்களில்...

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜூன் 3-ந்தேதி அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வந்துவிடும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், ஆண்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதுபோன்ற இன்னும் பலதிட்டங்கள் செயல்படுத்தப்படும். விராலிமலை தொகுதியில் 10 வருடம் செய்து காட்டியதை நாங்கள் 10 நாட்களில் செய்து காட்டுவோம். வருகிற 6-ந்தேதி தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் எழுத வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரசார நிகழ்ச்சியில் அன்னவாசல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்திரன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com