4 நாட்கள் அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்தாலே கொரோனா குறைந்து விடும்: மாநகராட்சி ஆணையர்

4 நாட்கள் அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்தாலே கொரோனா குறைந்து விடும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
4 நாட்கள் அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்தாலே கொரோனா குறைந்து விடும்: மாநகராட்சி ஆணையர்
Published on

சென்னை,

இன்று கிண்டியில் கொரோனா பரிசோதனை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிரமாக அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லுங்கள். அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது லேசான அறிகுறிகள் இருந்தாலோ உங்கள் வார்டு சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

வீட்டில்தனிமைப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்களுக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுக்கு அனைத்துவிதமான பரிசோதனையும் எடுக்கப்படும்.

லேசான அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறே தொற்றின் தன்மையைப் பொருத்து நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள் . மே மாதம் மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். சென்னையில் 4 நாட்கள் அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்தாலே கொரோனா குறைந்து விடும்என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com