முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை

முழு ஊரடங்கு காரணமாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடியது.
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை
Published on

மாமல்லபுரம்,

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி மாமல்லபுரம், பூஞ்சேரி மற்றும் புறவழிச்சாலையில் உள்ள சோதனை சாவடிகளில் மாமல்லபுரம் சரக உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் நேற்று காலை 8 மணி முதல் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேவையில்லாத காரணங்களால் வரக்கூடியவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனை சாவடிகளில் சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக மாமல்லபுரத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டதால் மாமல்லபுரம் நகரத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com