வாய்ப்பளித்தால் வாசல் தேடி வந்து வாழ்நாள் சேவையாற்றிடுவேன்; விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் உறுதி

விருதுநகர் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்.
வாய்ப்பளித்தால் வாசல் தேடி வந்து வாழ்நாள் சேவையாற்றிடுவேன்; விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் உறுதி
Published on

இவரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் போது பாண்டுரங்கன் பாரத பிரதமர் மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் என்றும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவையாற்றுவார் என பாராட்டிய தோடு இவருக்கு வாய்ப்பு அளித்தால் உங்களுக்கான சேவைகளை செய்வார் என உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் தெரிவித்ததாவது: விருதுநகர் தொகுதியில் அதிமுக ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக களமிறங்க எனக்கு வாய்ப்பு தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நான் பாஜகவில் இணைந்த காரணமே மக்கள் பணியாற்றிட தன்னை முழுமையாக அர்ப் பணித்துக் கொண்ட பாரத பிரதமரின் சேவை என்னை கவர்ந்தது தான் அந்த வகையில் அவரைப் போன்று நாமும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் பாஜகவில் இணைந்தேன் இதனை தொடர்ந்து எனக்கு மக்கள் சேவைசெய்ய வாய்ப்புத் தந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நான் விருதுநகர் தொகுதியில் தேவைகளை அறிந்து அவைகளை நிறைவேற்றிட உறுதியான முறையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இருந்தால் தான் திட்ட பணியை நிறைவேற்ற முடியும் அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சிய மைத்தால்தான் மத்தியில் பாஜக அரசின் ஒத்துழைப்பை பெற்று அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியும் எனவே தமிழகத்தில் அதிமுக அரிய ணை ஏறிட விருதுநகர் தொகுதி யில் பாஜக வெற்றி பெற்றிட வேண்டும் எனவே தொகுதி மக்கள் இதை நினைவில் கொண்டு எனக்கு ஆதரவு அளித்திட வேண்டுகிறேன் எனக்கு வாய்ப்பு அளித்தால் நிச்சயம் நான் தங்கள் வீட்டு வாசல் தேடி வந்து வாழ்நாளில் மறக்க முடியாத சேவைகளை செய்வேன்.

பொதுமக்களை சந்தித்து அவரது கோரிக்கைகள் என்ன என்று விரிவாக கேட்டறிந்து அவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக் கைகளை மேற்கொண்டு மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோரிக்கை மனுக்கள் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் திட்டப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். விருதுநகரை பொருத்தமட்டில் குடிநீர் பிரச்சினை தான் நிரந்தர பிரச்சனையாக இருந்து வருகிறது ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகருக்கு கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தைசெயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். நான் வெற்றி பெற்றால் உறுதியாக இத்திட்டத்தினை விரைவுபடுத்தி விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் மேலும் விருதுநகரில்

உள்ள கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வினியோகம் முறையாக இல்லாத நிலை உள்ளதாக புகார் கூறப்படும் நிலை உள்ளது எனவே கிராம பகுதிகளில் நேரடியாக சென்று எங்கெல்லாம் அந்த பிரச்சனை இருக்கிறதோ அதனை கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுப்பேன் மேலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் வல்லநாட்டில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் எனவே வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தனி மின் பாதை அமைக்கவும் குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் வரும் போது அதை உடனடியாக சீரமைக்கவும் உறுதியான நடவடிக்கை எடுப்பேன் மேலும்

விருதுநகருக்கான நிலத்தடி நீர் ஆதாரங்களை சீரமைத்து இதன் மூலம் கிடைக்கும் நீரின் அளவை அதிகரிக்க உரிய நடவ டிக்கை மேற்கொள்வேன் மேலும் விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த புனரமைப்பு திட்டத் தையும் நிறைவேற்றிட அரசின் உதவி யோடு செயல்படுத்த எந்த நேரமும் நடவடிக் கை எடுப்பேன் என்று கூறினார்.

விருதுநகர் கொல்லர் தெருவில் பாஜக வேட்பாளர் பாண்டுரெங்கன் வாக்கு சேகரித்த போது எடுத்த படம் அருகில் அதிமுக மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் முன்னாள் நகர சபை தலைவர் சாந்தி மாரியப்பன் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com