செங்கல்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தி.மு.க. ஊராட்சி கழக செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்தீஷ், ஒன்றிய பிரதிநிதி சேரமான், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.