'தழும்பு' இருந்தால் பணி இல்லை!

தோலில் தழும்பு இருந்தால் பணியில் சேர்க்க முடியாது என்று கானா நாட்டு குடியிறக்கத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
'தழும்பு' இருந்தால் பணி இல்லை!
Published on

மேலும் வெளுத்த தோல், தோலில் சுருக்கங்கள் உடையவர்களும் பணியில் சேர முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் கடினமான பயிற்சிகளின்போது இத்தகைய நபர்களுக்கும், அறுவைசிகிச்சை தழும்புகள் உள்ளவர்களுக்கும் ரத்தம் வரலாம் என்பதால் அவர்கள் பணிக்காக தேர்வு செய்யப்படவில்லை என்று அத்துறையின் அதிகாரி மைக்கேல் அமோகா அட்டா கூறினார்.

ஆனால் இது நியாயமற்றது என்றும், பாலியல் பாகுபாடு நிறைந்தது என்றும் சிலர் கூறுகின்றனர். பச்சை குத்தியவர்கள், சுருள்சுருளான தலைமுடி கொண்டவர்கள், வளைந்த கால்கள் உடையவர்கள் ஆகியோரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வெறும் 500 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 84 ஆயிரம் விண்ணப்பங்களை கானா குடியிறக்கத் துறை பெற்றது.

அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மருத்துவ மற்றும் முழு உடல் பரிசோதனைகளுக்கு உள்ளாக வேண்டும்.

தோல் சுருக்கங்கள் உடையவர்கள்கூட பணியில் சேர்வதில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

84 ஆயிரம் பேர் தலா 50 செடி (கானா நாட்டுப் பணம்) செலுத்தி விண்ணப்பித்தபிறகு வெறும் 500 பேரை மட்டுமே பணிக்கு எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது விண்ணப்பதாரர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com