கணவனுக்கு குத்து விடும் திருவிழா

சீனாவின் லாவோஜுன்ஷான் கிராமத்தில் ஜனவரி மாதத்தில் வித்தியாசமான திருவிழா ஒன்று நடக்கிறது. அதில் ஒரு நிகழ்வாக கணவர்கள் தங்கள் மனைவியரை எப்படி அக்கறையோடு நடத்துகிறார்கள் என்பதை கண்டறியும் போட்டியும் நடத்தப்படுகிறது.
கணவனுக்கு குத்து விடும் திருவிழா
Published on

கணவர்கள் குத்துச் சண்டை பயிற்சி பெறும் பன்ச் பேக் உள்ளே நின்று கொள்கிறார்கள். மனைவியரிடம் உங்கள் கணவர் மீது கோபம் இருந்தால், கோபம் தீரும் வரை குத்துங்கள் என்று சொல்லிவிட... திருவிழா கோலாகலமாகிறது. இந்த நிகழ்விற்காக ஏராளமான பெண்கள் வரிசையில் காத்திருந்தார்கள்.

ஆண்கள் பயத்துடன் தங்கள் மனைவியைப் பார்த்துக் கொண்டிருக்க, சில பெண்கள் குத்துவது போல நடித்துவிட்டு சென்றனர். ஒருசிலர் வலிக்காதது போலக் குத்தினர். ஆனால் ஒருசில பெண்களோ... கணவன் மீதான கோபத்தை குத்துகளில் காண்பிக்கின்றனர். இப்படி மனைவி கையால் அடி வாங்குபவர்களுக்கு விழா நடத்துபவர்களின் சிறப்பு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மனைவியிடம் அன்பாக நடத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com