ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - தொல்.திருமாவளவன் வேண்டுகோள்
Published on

மதுரை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை யார் என்றும் கூறி இருக்கிறார். ஆனால் இதுவரையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. சென்னையில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உயர்கல்வி மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவது ஏன்? என்பதை கண்டறிய வேண்டும். உயர்கல்வியில் மாணவ, மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். மேலும் பாத்திமா தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்று கூறி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களால் வெட்கப்படவேண்டிய நிலை உருவாகி உள்ளது. சபரிமலை தொடர்பான விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் அது குறித்து பேசக்கூடாது.

பெண்கள் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். கேரள மாநில அரசு, சபரிமலை பிரச்சினையின் போது வழிபாட்டுக்கு சென்ற பெண்களுக்கு பாதுகாப்பை அளித்தது. தற்போது முன்பதிவு செய்துள்ள பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com