மணல் கொள்ளைக்கு எதிராக ஐகோர்ட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மணல் கொள்ளைக்கு எதிராக ஐகோர்ட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
மணல் கொள்ளைக்கு எதிராக ஐகோர்ட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
Published on

மன்னார்குடி,

காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளதால் பொதுப்பணித்துறையின் அனைத்து பணிகளும் முடங்கி உள்ளது. இதனால் காவிரி டெல்டாவில் தண்ணீரை பகிர்ந்தளிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மேட்டூர் அணை உள்பட அனைத்து ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. உபரிநீர் கொள்ளிடம் வழியே அவ்வப்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. வடிகால் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாருவதற்கு நடப்பாண்டு அனுமதிக்கப்படாததால் மழைநீர் வடியாமல் வயல்வெளிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் சாகுபடி பணிகளை முழுமையாக தொடர முடியாமல் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப்படுகைகளிலும், விளைநிலப்பகுதிகளிலும் மணல் கொள்ளை தீவிர மடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால் டெல்டா மாவட்டங்கள் அழியும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, விவசாயிகள் கொண்ட குழுக்கள் கிராமங்கள்தோறும் உருவாக்கி காண்காணித்து பாதுகாக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர்கள் மணல் கொள்ளையர்கள் மீது தயவுதாட்சன்யமின்றி வெளிப்படையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், இளைஞர்கள் மணல் கொள்ளையை தடுக்க கிராமங்கள்தோறும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். ஐகோர்ட்டு தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து மணல் கொள்ளைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாசனத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com