பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சத்துணவு பணியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சத்துணவு பணியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சத்துணவு பணியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்
Published on

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அறவாழி, ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜயபாண்டியன், சத்துணவு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அயோத்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், மாணவமாணவிகளுக்கு சத்துணவு வழங்க தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். பிற்பகலில் மாணவமாணவிகளுக்கு சூடான பால் வழங்க வேண்டும். கல்வித்தகுதியின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.


ஓய்வு பெற்றுள்ள சத்துணவு பணியாளர்களுக்கு அவரவர் பணி நிலைக்கு ஏற்ப அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8வது ஊதியமாற்ற அரசாணையின்படி சரியான ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன், மாநில செயலாளர்கள் சேர்மைக்கனி, ஹேமலதா, மாவட்ட தலைவர்கள் சுந்தர்ராஜ், ராஜேந்திரன், புருஷோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாநில அமைப்பு செயலாளர் பலவேசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com