மாவட்டத்தில் 5 மையங்களில், போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 8,229 பேர் எழுதினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 8,229 பேர் எழுதினர்.
மாவட்டத்தில் 5 மையங்களில், போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 8,229 பேர் எழுதினர்
Published on

திண்டுக்கல்,

தமிழ்நாடு போலீஸ் துறையில் இரண்டாம் நிலை போலீசார், சிறைத்துறை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக விண்ணப்பித்த இளைஞர்களில் தகுதியான நபர்களுக்கு மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு நேற்று நடந்தது.

இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எம்.என்ஜினீயரிங் கல்லூரி, எஸ்.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளி, எஸ்.எஸ்.எம். சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எஸ்.என்.ஏ.என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் சக்தி மகளிர் கல்லூரி ஆகிய 5 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.

முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் எழுத்து தேர்வுக்கு 8 ஆயிரத்து 697 ஆண்கள், 1,311 பெண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 8 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 7 ஆயிரத்து 187 ஆண்கள், 1,042 பெண்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 229 பேர் நேற்று தேர்வு எழுதினர். 1,779 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களில் குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 11.20 மணிக்கு நிறைவு பெற்றது. தேர்வு மைய வளாகத்தில் விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் தேர்வு எழுத வந்த அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com