

மும்பை,
தென்மும்பை கொலபாவில் உள்ள ஒரு மதுபான பாரில் ஆபாச நடனம் அரங்கேறி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பாரில் சென்று அதிரடி சோதனை போட்டனர்.
அப்போது, அங்கு ஆபாச நடனம் நடந்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 6 வாடிக்கையாளர்கள், பார் ஊழியர்கள் என 15 பேரை கைது செய்தனர்.
விசாரணையின் போது, கைதான 6 வாடிக்கையாளர்களில் ஒருவர் மாநகராட்சி அதிகாரி என்பது தெரியவந்தது. மற்ற 5 பேர் தொழில் அதிபர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தது.